தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-14 20:40 GMT

கருப்பூர்:

கருப்பூரை அடுத்த மேட்டுப்பதி பகுதியை சேர்ந்தவர் வெங்கிடு (வயது 45) இவர் கரும்பாலை பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் சாப்பாட்டிற்காக மேட்டுப்பதியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (44) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்