உத்தனப்பள்ளி அருகே காப்பர் கம்பிகளை திருட முயன்றவர் கைது

Update: 2022-11-07 18:45 GMT

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி பக்கமுள்ள சங்கராயனபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 47). இவர் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி அவர் பணியில் இருந்த போது அங்கு வந்த மர்மநபர் 15 கிலோ காப்பர் கம்பிகளை திருடி கொண்டு தப்பி ஓட முயன்றார். இதை கவனித்த கிருஷ்ணமூர்த்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உத்தனப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்த ஏழுமலை (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்