மதுவிற்ற மூதாட்டி கைது

மதுவிற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-03 16:31 GMT

கீழக்கரை,

கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது. முள்ளுவாடி அருகே மூதாட்டி ஒருவர் மதுபாட்டில் விற்பனை செய்வதாக கீழக்கரை குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர்வாடி சப் -இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் கீழக்கரை குற்றப்பிரிவு போலீசார் மாயாகுளம் அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் பேச்சியம்மாள் (வயது 72) என்பவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 244 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்