பொம்மிடி அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேர் கைது

பொம்மிடி அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2022-10-30 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள கதிரிபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி கவுரி (வயது 37). இவர் கணவருடன் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி அன்று கவுரி கதிரிபுரத்துக்கு வந்தார். அங்கு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் விவசாய நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பிரச்சினைக்குரிய நிலத்தில் கவுரி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மூர்த்தி, அவருடைய மனைவி சிவரஞ்சனி, தாய் சிவகாமி ஆகியோர் கவுரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கவுரி, அவரது தாய் கண்ணம்மாள் ஆகியோரை தகாத வார்த்தையால் பேசி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த கவுரி, கண்ணம்மாள் ஆகியோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து கவுரி கொடுத்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், மூர்த்தி (30), சிவரஞ்சனி (22), சிவகாமி (45) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் மூர்த்தியை கைது செய்தனர்.

இதேபோல் சிவரஞ்சனி தன்னை தகாத வார்த்தையால் பேசி கல்லால் தாக்கி கொலை விடுத்ததாக கவுரி, கண்ணம்மாள் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் கவுரியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்