ஊத்தங்கரை அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

Update: 2022-10-29 18:45 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே கே.எட்டிப்பட்டி பக்கமுள்ளது கல்குமாரம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் மேனகா (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (20). உறவினர்களான இவர்களுக்கிடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது நவீன்குமார் தரப்பினர் மேனகாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேனகா சாமல்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார், வாசுகி ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்