போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது

போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-26 21:17 GMT

கன்னங்குறிச்சி:

அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அசோக் (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்து கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக வந்தவர்கள் போலீஸ்காரரின் பைக் மீது மோதுவது போன்று மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளனர்.

இதையடுத்து போலீஸ்காரர் அவர்களை எச்சரித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ்காரர் அசோக்கை தாக்கியதில் அவரது கை எலும்பு விரிசல் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் போலீஸ்காரரை தாக்கியது லைன்மேடு பகுதியை சேர்ந்த சையது முஸ்தபா மகன் அப்துல் ரகுமான் (20), ஷான்பாஷா மகன் ரியாசத் பாஷா (20), அஸ்ரப் அலி மகன் அஸ்லாம் அலி (20), ஷான் பாஷா மகன் ரிஹான் பாஷா (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்