அரூரில் 11 கிலோ கஞ்சா கடத்திய சேலம் வாலிபர் கைது

அரூரில் 11 கிலோ கஞ்சா கடத்திய சேலம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-21 19:00 GMT

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் போலீசார் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டவுடன் ஓட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்தி பிடித்தனர். அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 11 கிலோ கஞ்சா சிக்கியது. இதன்மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். அந்த கஞ்சா பையை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த இளையரசு (வயது 23) என்பதும், அவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரூர் போலீசார் இளையரசுவை கைது செய்தனர். அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்