மது விற்ற 16 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவிற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-15 19:24 GMT

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவிற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் சோதனை

தஞ்சை பழைய பஸ்நிலையம், கல்விராயன் பேட்டை, வரகூர், கீழவாசல் மீன்மார்க்கெட், தற்காலிக பஸ் நிலையம் மற்றும் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் தஞ்சை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் 5 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மது விற்ற 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம்-பட்டுக்கோட்டை

இதேபோல் கும்பகோணம், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அந்தந்த சரக பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

அதில் 10 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 10 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பாப்பாநாடு பகுதியில் மதுவிற்ற ஒருவரை பாப்பாநாடு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,250 பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்