புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடி,
இளையான்குடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பரமக்குடி ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக செய்யது அபுதாஹிர் (வயது 37), சீத்தூரணி பகுதியில் சீனி முஹம்மது ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 57 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.