வாலிபர் கொலையில் 3 பேர் கைது

வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-12 17:19 GMT

பனைக்குளம்

மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கல்கிணற்று வலசை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி வள்ளிமயில் இறந்ததை தொடர்ந்து இறுதிச் சடங்கு நடந்தபோது ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் ராஜாராம், அவரது மகன்கள் இருலேஸ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சேர்ந்து கோவிந்தன் மகன் கோட்டைகண்ணன் (வயது 39) என்பவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கோட்டை கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருலேஸ், ராஜாராம், தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்