ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நகை திருடியவர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம், திருத்தேர்வலை, சனவேலி ஆகிய பகுதிகளில் கடந்த 1½ ஆண்டுகளாக வீடுகளில் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவேலி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பகவதியிடம் மர்ம நபர் 4 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்சாமி, காவலர் கணேசன் ஆகியோர் விசாரணை செய்ததில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தைச் சேர்ந்த முத்துநாடார் மகன் சூர்யா என்ற சூரியகுமார் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் பல்வேறு இடங்களில் திருடிய 12½ பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டு சூரியகுமாரை கைது செய்தனர்.