நாமக்கல்லில், தொழிலாளியை விபசாரத்திற்கு அழைத்த மசாஜ் சென்டர் மேலாளர் கைது
நாமக்கல்லில், தொழிலாளியை விபசாரத்திற்கு அழைத்த மசாஜ் சென்டர் மேலாளர் கைது
நாமக்கல் பிடில்முத்து தெருவை சேர்ந்தவர் ஆசிக் (வயது 22). இவர் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றார். அப்போது அந்த மசாஜ் சென்டரின் மேலாளர் ரதீஷ் (வயது 41) மசாஜ் செய்ய ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதாகவும், மேலும் ரூ.1,500 கொடுத்தால் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியதாகவும் தெரிகிறது.
அதற்கு உடன்படாத ஆசிக் ரூ.2 ஆயிரம் கொடுத்து மசாஜ் மட்டும் செய்து விட்டு வந்து விட்டார். பின்னர் விபசாரத்திற்கு அழைத்தது தொடர்பாக நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மசாஜ் சென்டர் மேலாளர் ரதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.