புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரையை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது42). இவர் தென்பரை சந்தைப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.