த.மு.மு.க.வை சேர்ந்த 36 பேர் கைது

சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வை சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-06 18:24 GMT


சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வை சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மதுரையில் நேற்று தேசிய புலனாய்வு முகமை மற்றும் மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை அத்துடன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவகங்கை பகுதியில் இருந்து ஒரு வேனில் மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்துகொள்ள செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வேனை விரட்டிச் சென்று முத்துப்பட்டி அருகே மடக்கிப்பிடித்தனர்.

மறியல்

இதனை கண்டித்து வேனில் சென்றவர்கள் மதுரை- தொண்டி சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ரமேஷ், விமலா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வை சேர்ந்த சித்திக் முகமது உள்பட 36 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்