மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே உள்ள ஆத்துக்கொட்டாய் பஸ் நிலைய பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த வையாபுரி மகன் அன்பழகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்பழகனை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.