சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-06 18:45 GMT

திருவாரூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலிசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே பூங்காவூர் பகுதியில் பேரளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த பூங்காவூர் பகுதியை சேர்ந்த விமல் (வயது30) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்