தர்மபுரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது

தர்மபுரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது

Update: 2022-10-02 18:45 GMT

தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் அவ்வையார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பழைய ஏலகிரியை சேர்ந்த திருமால் (வயது 36) என்பது தெரியவந்தது. இவர் தர்மபுரி அரசு மருத்துவமனை, ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடி இருப்பதும் உறுதியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமாலை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்