ஊத்தங்கரை,
கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் ஓலப்பட்டி கூட்டு ரோடு அருகில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா இருந்தது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கொல்லப்பட்டியை சேர்ந்த ஞானவேல் (வயது 40) என்பதும், கிருஷ்ணகிரியில் இருந்து குட்காவை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், குட்கா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.