வேப்பனப்பள்ளியில் மாமனாரை தாக்கிய தொழிலாளி கைது

Update: 2022-09-21 18:45 GMT

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி பொம்மிடிபேட்டையில் வசித்து வருபவர் பாபு மகன் முபாரக் (வயது 21). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்த முபாரக்கின், சின்ன மாமனாரான ரியாஸ் பாஷா அங்கு வந்தார். அவர் முபாரக்கை தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த முபாரக், ரியாஸ் பாஷா முகத்தில் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்