மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு; 2½ மாதத்துக்கு பிறகு வாலிபர் கைது

Update: 2022-09-21 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே பேரிகையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் அதிகாலை மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த அலுவலர்களை ஒரு அறையில் வைத்து அடைத்தனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மின் உபகரணங்களை அவர்கள் திருடி சென்றனர். அதிகாலையில் நடந்த இந்த துணிகர திருட்டு குறித்து பேரிகை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கெலமங்கலத்தை சேர்ந்த முனியா மகன் செல்வராஜ் (வயது 21) என்பவரை மின்வாரிய அலுவலகத்தில் திருடியதாக 2½ மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். இதனால் இந்த திருட்டு சம்பவத்தில் கைதான நபர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்