தளியில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
தளியில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது;
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே ஆனைக்கல்லில் இருந்து கலுகொண்டப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள கனமனப்பள்ளி பகுதியில் ஓசூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையியலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து தளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் நாதர்சா தெருவை சேர்ந்த டிரைவர் முகமது அசேன் (வயது 24), முகமதுபுரத்தை சேர்ந்த முகமது மன்சூர் (22) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 172 கிலோ புகையிலை பொருட்களுடன் காரை பறிமுதல் செய்தனர்.