சாராயம் விற்ற 4 பேர் கைது

Update: 2022-09-15 19:00 GMT

அரூர்:

கோட்டப்பட்டி போலீசார் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது செந்தில் (வயது 30), கோவிந்தராஜ் (35), மணி (57), மாணிக்கம் (32) ஆகிய 4 பேர் வெவ்வேறு இடங்களில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மொத்தம் 42 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்