பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்-போக்சோவில் வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது மகன் சரவணன் (வயது 20). இவர் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.