ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே நடுப்பட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் நடுப்பட்டி கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வி (வயது 41), மங்கை (40) ஆகியோர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 26 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஊத்தங்கரை உட்கோட்ட போலீஸ் எல்லை பகுதிகளில் யாராவது சாராயம் விற்பது தெரியவந்தால் உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.