பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது

பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-25 22:28 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பத்மா (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பத்மா தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்து விற்பனை செய்து வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று பத்மாவின் கடையில் சோதனை செய்த போலீசார் அங்கு குட்கா பொருட்கள் வைத்து விற்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பத்மாவை கைது செய்த போலீசார், கடையில் இருந்த சுமார் 8 கிலோ எடையுள்ள ஹான்ஸ், பான் மசாலா, கூல் லிப் போதை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.8 ஆயிரத்து 500 ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்