நாமக்கல்லில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல்லில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகன் சூர்யா (வயது28). இவரை கடந்த மாதம் 14-ந் தேதி ராமாபுரம் புதூர் தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக நாமக்கல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரேயாசிங், சூர்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை நாமக்கல் போலீசார் நேற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சூர்யாவிடம் வழங்கினர்.