புத்திரகவுண்டம்பாளையத்தில் இரும்பு கடையில் திருடிய 2 பேர் கைது

புத்திரகவுண்டம்பாளையத்தில் இரும்பு கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-22 22:34 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

புத்திரகவுண்டம்பாளையம் மெயின் ரோட்டில் முத்துக்குமார் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது கடையில் பூட்டை உடைத்து ஒரு டன் இரும்பு கம்பி, ரூ.11 ஆயிரம் மற்றும் ஒரு லாரி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இரும்பு கடையில் திருடியதாக புதுக்கோட்டையை சேர்ந்த விஜய் என்கிற விஜி (வயது 30), சின்னையன் என்கிற குணா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு டன் இரும்பு கம்பிகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய முருகேசன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்