ஊஞ்சலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
ஊஞ்சலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
ஊஞ்சலூர்
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் உள்ள காரணம்பாளையத்தில் அணைக்கட்டு உள்ளது. இங்கு விநாயகர் தன்னாசியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பதித்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை ஒருவர் எடுத்துக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து மலையம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் காரணம்பாளையத்தை சேர்ந்த அன்சார் அலி (வயது 32) என்பதும், அவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் வைத்திருந்த மோட்டார்சைக்கிள் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் திருடப்பட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து உண்டியலில் இருந்து திருடப்பட்ட ரூ.250 மற்றும் மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.