திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

ஊத்தங்கரை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-19 15:38 GMT

ஊத்தங்கரை:

சிறுமி கர்ப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இருடைய மகன் பிரட்லீ (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் கடந்த ஓராண்டாக பழகி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். இந்தநிலையில் சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரட்லீயை வற்புறுத்தி வந்தார்.

வாலிபர் கைது

ஆனால் பிரட்லீ சிறுமியை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் பிரட்லீயை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்