சிங்கம்புணரி,
சிங்கம்புணரி நகர் பகுதியில் அதிகாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சாக்கு மூடைகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தியதாக அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முபாரக் என்பவரை கைது செய்தனர். மேலும் சிங்கம்புணரி முழுவீரன் தெருைவ சேர்ந்த அன்பு செழியனை தேடி வருகின்றனர்.