புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள ஏமம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 50). இவர் தனது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக இளையான்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட ஈஸ்வரர் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 27 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.