ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-10 16:26 GMT


ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் பாஸ்கரன் (வயது 37). இவர் பழைய பஸ்நிலைய பகுதியில்் ஆட்டோ ஓட்டி வருகிறார். தினமும் ஆட்டோ வரிசையாக சென்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தனக்கு முன்னால் இருந்த ஆட்டோக்காரர் தூங்கி விட்டதால் பாஸ்கரன் சவாரி ஏற்றிச் என்றாராம். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ராஜசூரியன் என்பவர் 2 நபர்களுடன் வந்து பாஸ்கரனை சரமாரியாக தாக்கியதுடன் ஆட்டோவை சேதப்படுத்தினாராம். இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் ராஜசூரியன் மற்றும் ஆர்.எஸ். மடையை சேர்ந்த ஜெயமுருகன் மகன் என்ற சோப்ரா பிரதீப்குமார் (25) மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சோப்ரா பிரதீப் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்