விவசாயியை கொலை செய்த வாலிபர் கைது
விவசாயியை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவ பட்டியை சேர்ந்த முதியவர் நல்லதம்பி (வயது65).விவசாயி. இவர் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த யுவராஜா சூர்யா என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இதில் முன்விரோதம் காரணமாக விவசாயியை வாலிபர் கொலை செய்தது தெரிய வந்தது.