கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-26 17:12 GMT

காரைக்குடி,

காரைக்குடி பாரதி நகர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 24), சுரேஷ் கருப்பையா (26), சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(23) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு சோதனையிட்டனர். அப்போது அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்