பேரையூர்,
டி.கல்லுப்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலி கம்பிகள் திருடு போனது. இதே போல் பேரையூர் பகுதியில் பெண் ஒருவரிடம் ஒரு பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக செங்கப்படையை சேர்ந்த முத்துக்குமார் (வயது 21), கார்த்திகைபாண்டி (22), முத்துக்குமார் (20), சிவரக் கோட்டையை சேர்ந்த கருப்பையா (27), கெஞ்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (35) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.