சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பகுதியில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடுக்கம்பட்டியை சேர்ந்த முருகன், நாகரத்தினம், சிங்கராஜா ஆகியோர் மது பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை சிங்கம்புணரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.