எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே நெடுவயல் கிராம பகுதியில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது கே.நெடுவயல் அரசு டாஸ்மாக் மதுபான கடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த கிழவயல் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகன் வில்லியம் ராஜா (வயது 47) என்பவரை கைது செய்து 15 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1,500-ஐபறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.