13 டன் ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது

சாயல்குடியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கடத்த இருந்த 13 டன் ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

Update: 2022-07-01 17:31 GMT

சாயல்குடி, 

சாயல்குடியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கடத்த இருந்த 13 டன் ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

ரோந்து

சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சால்மன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் சாயல் குடியில் இருந்து செவல்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்ல வந்த லாரியை சோதனை செய்ததில் 13 டன் ரேஷன் அரிசியை லாரியில் வைத்து கடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து சாயல்குடி போலீசார் ரேஷன் அரிசியுடன் லாரி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது32), நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் வாகனங் களை ராமநாதபுரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்