இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள பெருமச்சேரி கிராமத்தில் செல்வம் என்பவரது வயலில் திருட்டுத்தனமாக சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்த பெருமச்சேரி கிராம நிர்வாக அதிகாரி மணிவண்ணன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மணல் அள்ளிய இளமனூர் கிராமத்தை சேர்ந்த அருளானந்து (வயது31) மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் இளமனூர் கிராமத்தை சேர்ந்த அருளானந்து மற்றும் வாகன உரிமையாளர் பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட ஈஸ்வரன் விசாரணை செய்து வருகின்றார்.