3 டன் ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது

3 டன் ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-29 16:47 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக ராமநாதபுரம் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜித் மேரி தலைமையில் தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி உள்ளிட்டோர் அந்த பகுதியில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடலாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 65 மூடைகளில் தலா 50 கிலோ எடையுள்ள 3 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கமுதி நாடார் பஜார் விஜய ராஜன் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 42) மற்றும் கடலாடி ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் திருமலை பாண்டி (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்