வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-24 16:57 GMT

மதுரை, 

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மிரட்டல்

மதுரை தத்தனேரி புது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40), கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து அவர் செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லூர் தத்தனேரி களத்துப் பொட்டல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (28), 14 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அதில் சிறுவன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அதே போன்று விளாங்குடி, சொக்கநாதபுரம் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பரத்குமார் (27). இவரிடம் பணம் பறித்த விளாங்குடி பகுதியை சேர்ந்த பிரசாத் (27) என்பவரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

கைது

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (48). சம்பவத்தன்று இவர் அவனியாபுரத்தில் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் குருநாதனை கத்தியை காட்டி மிரட்டி 4,650 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்