செல்போன், பணத்தை பறித்தவர் கைது

செல்போன், பணத்தை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-23 21:02 GMT


மதுரை கணேசபுரம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 24). இவரது சகோதரர் சங்குபாண்டி (26). கட்டிட தொழிலாளிகள். சம்பவத்தன்று நள்ளிரவு இவர்கள் தத்தனேரி மயான பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா (19), தவளை சரவணன், திரவியம், ரெண்டு மண்டை ஆகிய 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சங்குபாண்டி, மருதுபாண்டி ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த கும்பல் அவர்களை கத்தியால் குத்தி விட்டு செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்