நடிகரை தாக்கிய பெட்ரோல் 'பங்க்' ஊழியர் கைது
சேலத்தில் நடிகரை தாக்கிய பெட்ரோல் ‘பங்க்’ ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கன்னங்குறிச்சி:
சேலம் அஸ்தம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்தவர் பெஞ்சமின். தமிழ் திரைப்பட நடிகரான இவர், 'திருப்பாச்சி' படத்தில் நடிகர் விஜய்க்கு நண்பராக நடித்து பிரபலமானவர். சம்பவத்தன்று கோரிமேட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றார். அப்போது அவருக்கும், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரான கிருஷ்ணமூர்த்திக்கும் (வயது 39) இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் பெஞ்சமினை அவதூறாக பேசி தாக்கி உள்ளார். இதுகுறித்து நடிகர் பெஞ்சமின் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.