54 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது

54 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-19 17:12 GMT

பேரையூர், 

54 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனை

மதுரை மாவட்டம் பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரோஜா உத்தரவின் பேரிலும், இன்ஸ்பெக்டர் காந்தி ஆலோசனையின் பேரிலும், குற்றத்தடுப்பு போலீசார் மற்றும் சாப்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சம்பந்தமாக அத்திபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட 54 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பொருட்கள் இருந்தன. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது

மேலும் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்கள் வைத்து இருந்த அத்திபட்டியை சேர்ந்த செல்வராஜன் (வயது 65), குணசேகரன் ( 60) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்