குடும்பத்தகராறில் தந்தையின் காதை கடித்த மகன் கைது

குடும்பத்தகராறில் தந்தையின் காதை கடித்த மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-18 18:09 GMT

திருமங்கலம், 

குடும்பத்தகராறில் தந்தையின் காதை கடித்த மகன் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி

திருமங்கலம் அருகே உள்ள வளங்காகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி(வயது 56). விவசாயி . இவரது மனைவி தங்கம்மாள் (50). மகன் பிரசாத் (25). கூலித் தொழிலாளி. பிரசாத் குடும்ப பிரச்சிைன காரணமாக மனைவியை அடித்துள்ளார். இதையடுத்து அவரை பாண்டி மற்றும் தங்கம்மாள் ஆகியோர் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரசாத் தந்தையின் காதை கடித்துள்ளார். தடுக்க வந்த தாய் தங்கம்மாளையும் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது

இதுகுறித்த தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்