ரூ.20 ஆயிரம் கடனுக்கு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல்: கந்துவட்டி வழக்கில் டிரைவர் கைது

ரூ.20 ஆயிரம் கடனுக்கு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுத்த டிரைவர், கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-17 22:03 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி கேட் மூணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32), விசைத்தறி தொழிலாளி. இவர் தாதகாப்பட்டி செல்லக்குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் சாமிநாதன் (26) என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி இருந்தாராம். அதற்கு அவர் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் கடனை செலுத்தி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் அவர் தவணையை சரிவர கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது கடன் பாக்கி தொகை ரூ.50 ஆயிரத்தை முருகேசன் திருப்பி தர வேண்டும் என சாமிநாதன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

மேலும் கடன் தொகைக்காக முருகேசனின் மோட்டார் சைக்கிளை சாமிநாதன் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் முருகேசனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கந்துவட்டி கொடுமை பிரிவின் கீழ் சாமிநாதன் மீது அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சாமிநாதனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்