பணம் வைத்து சூதாடிய கும்பல் சிக்கியது
சேலத்தில் பணம் வைத்து சூதாடிய கும்பல் சிக்கியது.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் போலீசார் அர்த்தனாரி தெரு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த, சண்முகம் (வயது 33), ராஜேந்திரன் (59) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த கும்பல் சூதாட்டத்துக்கு வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.