திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

ஓமலூர் அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-14 22:22 GMT

ஓமலூர்:

ஓமலூர் அருகே உள்ள மரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவரது வீட்டில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி வெள்ளி பொருட்கள், தங்கத் தாலி உள்ளிட்ட ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், எடப்பாடி வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்த செல்லதுரை (36) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த செல்லதுரை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையடுத்து கடந்த 8-ந் தேதி செல்லதுரையை பிடிக்க ஓமலூர் கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் செல்லதுரையை கைது செய்தனர். பின்னர் அவர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்