ஆத்தூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது
ஆத்தூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் வெள்ளி ராஜா (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் ெபற்றோர் ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை கடத்தியதாக வெள்ளி ராஜாவை கைது செய்தார்.