திருப்புவனம்,
திருப்புவனம் மேல்புறம் மருதமரம் அருகே வைகை ஆற்று பகுதியில் இருந்து அனுமதியின்றி வேனில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுரை மாவட்டம் சக்குடி பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் லெட்சுமணன் (வயது30), லோடுமேன் கருப்பு (63), வேன் உரிமையாளர் சங்கர் (40) ஆகிய 3 பேர் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து டிரைவர் லெட்சுமணன், லோடுமேன் கருப்பு ஆகிய 2 பேரை கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.